பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர், நவீன போர்முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு : முப்படை தளபதி ஜென்ரல் அனில் சௌகான்
Posted On:
11 NOV 2025 5:05PM by PIB Chennai
துல்லியமான தாக்குதல் திறன்கள், கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் மின்னணு மயமாக்கப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் ஆபரேஷன் சிந்தூர், நவீன போர்முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று முப்படை தளபதி ஜென்ரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற தில்லி பாதுகாப்பு விவாத நிகழ்ச்சியில் நவீன போர்முறையின் தொழில்நுட்ப தாக்கம் குறித்து சிறப்புரை ஆற்றிய அவர், வளர்ந்து வரும் அம்சங்களுக்கு ஏற்ப விரைவாக மாற வேண்டியதன் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். போர்களத்தில் வெற்றியை தீர்மானிப்பதில் முன்னணி தொழில்நுட்பம் ஒரு உறுதியான காரணியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். போர்முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோர் வெற்றி பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கோட்பாடுகள் மற்றும் மாறி வரும் புவிசார் அரசியல் சூழல்கள் ஆகியவற்றின் வலுவான தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார். விரைவான புதுமை கண்டுபிடிப்பு உத்திசார்ந்த கூட்டாண்மைகள் மற்றும் ஆயுதப்படையினருக்கிடையே அமைப்பு சார்ந்த பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் நவீன போர்முறை மாற்றியமைக்கப்படுவதாக ஜென்ரல் அனில் சௌகான் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188834
***
SS/IR/AG/SH
(Release ID: 2188926)
Visitor Counter : 16