சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்று மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளை மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்
Posted On:
11 NOV 2025 4:55PM by PIB Chennai
காற்று மாசுக்கட்டுப்பாடு மேலாண்மை முயற்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற காற்று மாசு குறித்த உயர்நிலைக்குழு கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். தலைநகர் தில்லி பிராந்தியத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பது தொடர்பாக நடைபெற்ற நான்காவது ஆய்வுக் கூட்டம் இதுவாகும். தில்லி அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் துறை அமைச்சர் திரு சர்தார் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பயிர் கழிவுகள் எரிப்பு தடுப்பு மேலாண்மைக்காக மாவட்ட வாரியான திட்டத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை திரு பூபேந்தர் யாதவ் கேட்டுக்கொண்டார். பயிர் கழிவு மேலாண்மை எந்திரங்களை இயக்குவதில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மாவட்ட அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். திடக் கழிவுகளை திறந்தவெளி பகுதியில் எரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் திரு யாதவ் கேட்டுக்கொண்டார். சாலைப்பகுதியில் ஏற்படும் தூசிகளை குறைப்பது தொடர்பாக அடையாளம் காணப்பட்ட நகர்ப்புற மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கான சாலை மறுமேம்பாடு திட்டங்களை திரு பூபேந்தர் யாதவ் ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188826
***
SS/IR/AG/SH
(Release ID: 2188924)
Visitor Counter : 12