பாதுகாப்பு அமைச்சகம்
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தடையற்ற, விரைவான, தன்னிறைவு பெற்ற சூழல்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்: திரு ராஜ்நாத் சிங்
Posted On:
11 NOV 2025 1:18PM by PIB Chennai
நுகர்வோர் என்ற நிலையிலிருந்து தொழில்நுட்பத்தை உருவாக்குபவராக இந்தியா மாறுவதற்கு புதுமை கண்டுபிடிப்புகளைப் பெறுவது மட்டுமின்றி, சிறப்பான தயாரிப்புகளை ஊருவாக்கும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.
புதுதில்லியில் 2025 நவம்பர் 11 அன்று மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் ஏற்பாடு செய்த தில்லி பாதுகாப்பு உரையாடலில் கலந்து கொண்ட அவர், 'பாதுகாப்பு திறன் மேம்பாட்டிற்கான புதிய யுக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் தொடக்க உரையாற்றினார்.
புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதையும் ஏற்றுக்கொள்வதையும் இயற்கையான, விரைவான மற்றும் தன்னிறைவு பெறச் செய்யும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். நமது அடித்தளங்கள் வலுவாக இருக்கும்போதும், நமது நிறுவனங்கள் சிறந்த செயல்பாட்டுடன் இருக்கும்போதும், நாம் திறந்த மனதுடன் இருக்கும் போதும், நமது ஒத்துழைப்பு தடையின்றி உள்ள போதும், ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப நுணுக்கமும் நம்மை வெற்றிகொள்ளாது என்று கூறினார். மற்ற இடங்களில் ஏற்படும் புரட்சிகளுக்கு ஏற்ப நாம் தயார்படுத்தி கொள்ளாமல், இங்கு ஏற்படும் புரட்சிகளின் சிற்பிகளாக திகழ்வோம் என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், குவாண்டம் கம்ப்யூட்டிங் & ஸ்வார்ம் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்திய நிலையில், முன்னேற்றத்தின் உண்மையான சோதனை அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் உள்ளதாக குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் சக்தி உபகரணங்கள் அல்லது வழிமுறைகளோடு மட்டுமில்லாமல்; அதன் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையில் உள்ளது என்று அவர் கூறினார்.
தமது உரையின் தொடக்கத்தில் 2025 நவம்பர் 10 அன்று தில்லியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திரு ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதன் முடிவுகள் விரைவில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். இந்த பயங்கர சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும் எந்த சூழலிலும் அவர்கள் தப்பிவிட முடியாது என்றும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188684
***
SS/IR/AG/RK
(Release ID: 2188788)
Visitor Counter : 12