பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையின் 39-வது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
Posted On:
10 NOV 2025 3:15PM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை குறித்த 39-வது (அக்டோபர் 2025) அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பொதுமக்கள் தெரிவித்துள்ள குறைகளின் வகைமைகள் பற்றிய பகுப்பாய்வையும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பைசல் செய்யப்பட்ட தன்மையையும் வழங்குகிறது.
2025 அக்டோபர் மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 64,736 குறைதீர்ப்புக்கான கோரிக்கைகள் வரப்பெற்றன. இவற்றில் 63,305 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. சிபிகிராம்ஸ் போர்ட்டலில் 2025 அக்டோபர் 31 நிலவரப்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,76,091 குறைகள் நிலுவையில் உள்ளன.
சிபிகிராம்ஸ் போர்ட்டல் மூலம் 2025 அக்டோபரில் புதிய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, பல்வேறு வழிகளில் மொத்தம் 52,876 புதிய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். பின்னூட்ட அழைப்பு மையத்தின் மூலம் 2025 அக்டோபரில் 65,197 பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 27,011 பின்னூட்டங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்டன.
பொதுசேவை மையங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட குறைகள் குறித்து மாநில வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. செவோட்டம் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்த விவரங்களை தெரிவித்துள்ள இந்த அறிக்கை 2025-26 நிதியாண்டில் 2025 அக்டோபர் 31 வரை 132 பயிற்சி திட்டங்களை மேற்கொண்டு 4,432 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188319
****
SS/SMB/AG/SH
(Release ID: 2188566)
Visitor Counter : 9