சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்டத்துறையில் தூய்மைப் பணிகளுக்கான பிரச்சார இயக்கம் 5.O வெற்றிகரமாக நிறைவடைந்தது.
प्रविष्टि तिथि:
10 NOV 2025 12:28PM by PIB Chennai
சட்டத்துறையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு பிரச்சாரம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக அலுவலக வளாகங்களில் தூய்மையை பராமரிப்பது, திறன்மிக்க ஆவண மேலாண்மை மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பது என பல்வேறு வகைகளில் பணிகள் நடைபெற்றன.
இதற்காக துறைசார்ந்த சிறப்பு அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண்பது, பழைய ஆவணங்களை ஆய்வு செய்வது மற்றும் அலுவலக மேலாண்மைப் பணிகளில் ஒட்டுமொத்த மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்த தூய்மை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
சட்டத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு நடவடிக்கையின் கீழ், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளின்போது, மின்னணு சாதனங்களை அடையாளம் கண்டு அவற்றில் பயன்படாத கழிவுகளை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மின்னணு கழிவு மேலாண்மை குறித்த பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் நீடித்த தூய்மையுடன் கூடிய பணியிடங்களை மேம்படுத்துவதற்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188249
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2188456)
आगंतुक पटल : 25