வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான இரண்டு நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் நிறைவடைந்தது - நிறைவு அமர்வில் மத்திய இணையமைச்சர் திரு டோகன் சாஹு பங்கேற்பு

प्रविष्टि तिथि: 09 NOV 2025 5:50PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய நகர்ப்புற மாநாடு 2025-ன் நிறைவு அமர்வில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு பங்கேற்றார்.

தேசிய நகர்ப்புற மாநாடு 2025-ன் இறுதி நாளான இன்று (09.11.2025) நகர்ப்புற நிர்வாகம், சுழற்சிப் பொருளாதாரம், நகர்ப்புற வீட்டுச் சூழல் அமைப்பு ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களில் தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெற்றன. நகர்ப்புற நிர்வாகம் குறித்த அமர்வில், எதிர்காலத்திற்குத் ஏற்ற நகர்ப்புற நிர்வாகத்தை உருவாக்குவது குறித்து நிபுணர்கள் விவாதித்தனர்.

சுழற்சிப் பொருளாதாரம் குறித்த அமர்வில், கழிவுப் பொருட்களை வளங்களாக மாற்றும் வழிகளை குறித்தும், சுழற்சிப் பொருளாதாரத்தை ஒருங்கிணைந்த கொள்கையாக மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. நகர்ப்புற வீட்டுச் சூழல் அமைப்பு குறித்த அமர்வில், வாழ்வாதார வாய்ப்புகள், மலிவு விலையில் வீட்டுவசதி போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு டோகன் சாஹு, வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கும் வகையில், நகர்ப்புறங்களில் வறுமை ஒழிப்பு என்பதைத் தாண்டி அதிகாரமளித்தல், தொழில்முனைவு நோக்கி முன்னேறி வருவதாக கூறினார். நகர்ப்புறங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசுடன், மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தனியார் துறையினர் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188050   

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2188092) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Punjabi