வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் மெல்போர்ன் பயணம்
प्रविष्टि तिथि:
08 NOV 2025 6:56PM by PIB Chennai
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்வதற்காக மத்திய வர்த்தகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்குச் சென்றுள்ளார்.
மெல்போர்ன் நகரில் நவம்பர் 8, 2025 அன்று அந்நாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு டான் ஃபாரெல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் துறை அமைச்சர் திரு ஆண்ட்ரூ கில்ஸ் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள் மதிப்பாய்வு செய்தனர். இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். சரக்கு மற்றும் சேவைகள் குறித்த வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன.
2024–25 - ம் நிதியாண்டில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 24.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இந்தியாவின் ஏற்றுமதி 2023–24 -ம் ஆண்டில் 14% வளர்ச்சியையும் 2024–25 -ம் நிதியாண்டில் மேலும் 8% வளர்ச்சியையும் பதிவு செய்தன.
2022 -ம் ஆண்டு டிசம்பரில் நடைமுறைக்கு வந்த இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை அளிக்கும் இந்த ஒப்பந்தம் ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187846
***
AD/SV/RJ
(रिलीज़ आईडी: 2187929)
आगंतुक पटल : 23