வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகத் துறையில் செயல்திறன், தூய்மையான நிர்வாகத்திற்கான சிறப்பு பிரச்சாரம் 5.0 வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
Posted On:
08 NOV 2025 12:58PM by PIB Chennai
மத்திய அரசின் வர்த்தகத் துறை, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2025 வரை நடைபெற்ற தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு பிரச்சாரம் 5.0 நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்புப் பிரச்சாரம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் முழுவதிலும் தூய்மைப் பணிகளை ஊக்குவித்தல், பணிக்கான செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது போன்றவற்றில் கவனம் செலுத்தியது. இந்த முயற்சியின் காரணமாக, நிர்வாக நடைமுறைகளை நெறிப்படுத்தவும், பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணவும், பணியிடச் சூழல் மேலாண்மை மற்றும் சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு பிரச்சாரம் 5.0 - ன் செயல்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அதன் கள அமைப்புகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், துறை மற்றும் அது சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள அதிகாரிகளின் சிறப்பான செயல்பாடுகள் இந்த பிரச்சாரத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த தூய்மைப் பணிகளுக்கான சிறப்புப் பிரச்சாரத்தின் கீழ், 88,385 கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவற்றில் 46,255 தேவையற்ற கோப்புகள் அகற்றப்பட்டன. மொத்தம் 277 தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மின் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றுவதன் மூலம் சுமார் 70 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக 36,005 சதுர அடி பரப்பிலான அலுவலக இடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தின் தலைமையகத்தில் பெரிய அளவிலான முன்னேற்ற சாதனங்களை அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், வீடுகளின் மேற்கூரையின் மேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற நிலையை உருவாக்குதல், பசுமைக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவது, மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் அலுவலக வளாகங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதன் வாயிலாக பயன்பாட்டிற்கான இடவசதியை அதிகரித்தல் மற்றும் மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டல வளாகத்திற்கு அருகிலுள்ள ஏரியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பதிவு மேலாண்மை, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்துதல், மின் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் மின் சாதனங்களின் சரக்கு மேலாண்மை மற்றும் மின்தூக்கிகள் குறித்த ஆய்வுகள் ஆகியவையும் இந்த தூய்மைப் பணிகளில் இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187735
***
AD/SV/RJ
(Release ID: 2187926)
Visitor Counter : 3