ஆயுஷ்
azadi ka amrit mahotsav

வந்தே மாதரம் பாடல் காலத்தைக் கடந்து தேச விழிப்புணர்வின் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது – மத்திய அமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ்

प्रविष्टि तिथि: 07 NOV 2025 3:54PM by PIB Chennai

வந்தே மாதரம் என்ற தேசியப் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், ஆயுஷ் பவனில் அனைவரும் பங்கேற்று இந்தப் பாடலைப் பாடும் நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ்  அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. மத்திய கலாச்சார அமைச்கத்தால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் தலைமையில், அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து பாடினர்

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வந்தே மாதரம் பாடல் காலத்தைக் கடந்து தேச விழிப்புணர்வின் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார். இந்தப் பாடல் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற   சுதந்திரப் போராட்த்திற்கான உந்துசக்தியாக இருந்தது.

வந்தே மாதரம் பாடல் நாட்டுப்பற்று உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதுடன், 1857-ல் தேசத்தின் முதலாவது சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட உணர்வைப் போன்றதுஇந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் காலத்தைக் கடந்து ஆழமான அன்பையும், தாய்நாட்டின் மீதான ஒவ்வொரு குடிமகனின் பக்தியையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார் அமைச்சர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187350  

***

AD/SV/KPG/RJ


(रिलीज़ आईडी: 2187616) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी