சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில் ஜிப்மர் மருத்துவமனையின் ஊழியா்கள் பங்கேற்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2025 5:27PM by PIB Chennai

இந்தியாவின் தேசியப் பாடலான “வந்தே மாதரம்” பாடல் இயற்றப்பட்டு 150-வது ஆண்டை நவம்பர் 07, 2025 அன்று நிறைவு செய்கிறது. “உன்னதமான இந்திய அன்னையை  வணங்குகிறேன்” என்று பொருள்படும் இந்தப் பாடல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டை கட்டமைப்பதில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும், பல்வேறு தலைமுறைகளை கடந்தும் மக்கள் மனங்களில் நாட்டுப்பற்றை விதைத்து வந்துள்ளது. இது இந்தியாவின் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமை உணர்வையும் பிரதிபலிக்கும் நிலையான அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது.

 

இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தையொட்டி இணையவழியாக நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வீர் சிங் நெகி உரையாற்றினார். வந்தே மாதரம் பாடல் இந்திய மக்களிடையே ஒற்றுமை, தியாகம் மற்றும் நாட்டுப்பற்று உணர்வை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அவா் தெரிவித்தார்.

 

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இந்திய குடிமக்களிடமும் நாட்டுப்பற்றை தெய்வீக உணர்வாக விதைப்பதுடன், நாட்டின் முன்னேற்றத்துக்கும், ஒற்றும்மைக்கும் உத்வேகம் அளித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜிப்மர் நிறுவனத்தின் மூத்த பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்த இணையவழி நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

 

***

  SS/SV/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2187443) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: English