சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நாடுமுழுவதும் உள்ள சட்டத்துறை அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது
Posted On:
07 NOV 2025 1:19PM by PIB Chennai
நாடுமுழுவதும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்டவிவகாரத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் வந்தே மாதரம் பாடலை இணைந்து பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையில் நவம்பா் 7-ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் இந்த பாடல் பாடப்பட்டது.
வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வலுவான குரலாக இருந்ததுடன், ஒருமைப்பாடு மற்றும் வலிமையின் மகத்துவம் குறித்து பல்வேறு தலைமுறையினரிடையே தொடர்ந்து ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுப்பற்றுடன் வந்தே மாதரம் பாடலை இன்று காலை 10 மணிக்கு பாடினர். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணா கலந்து கொண்டார். மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வந்தே மாதரம் பாடல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுக்கு மனமார்ந்த மரியாதை செலுத்துவதாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சார அடையாளம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில் சட்டத்துறை அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தேசிய அளவிலான முயற்சிகள் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
***
(Release ID: 2187245)
SS/SV/RK/KR
(Release ID: 2187390)
Visitor Counter : 5