பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி கன்டோன்மென்ட் ராணுவ மருத்துவமனை செவிலியர் கல்லூரியின் 8வது தொகுதி படையில் இணையும் விழா
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2025 5:07PM by PIB Chennai
டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குட்பட்ட செவிலியர் கல்லூரியில், அதன் 8வது தொகுதியைச் சேர்ந்த 29 ராணுவ செவிலியர் மாணவிகள் படையில் இணையும் விழா 2025 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் நடைபெற்றது.
நான்கு ஆண்டுகள் நடைபெற்ற தீவிரக் கல்வி மற்றும் பயிற்சியின் உச்சகட்டத்தைக் குறிக்கும் வகையில் இந்த விழா அமைந்தது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட இந்தச் செவிலியர் அதிகாரிகளுக்கு, கருணையுள்ளம் கொண்டப் பராமரிப்பாளர்களாக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கான உறுதிமொழியை தலைமை செவிலியர் செய்து வைத்தார்.
இந்த விழாவை ராணுவ மருத்துவமனையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அவினாஷ் தாஸ் தலைமையில் நடைபெற்றது. அவர் தனது உரையில், 100 ஆண்டுகால ராணுவ செவிலியர் சேவையின் உன்னதமான பாரம்பரியத்தையும் மரபையும் நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், அமைதிக் கால ராணுவ நிலையங்களிலும், புவியியல் ரீதியாகக் கடினமான பகுதிகளிலும் வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்கள் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டினார். செவிலியர் கல்லூரியின் முதல்வர் மற்றும் குழுவினரின் ஓய்வில்லாத முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட செவிலிய அலுவலர்களின் பெற்றோர், அதிகாரிகள் மற்றும் செவிலியர் அதிகாரிகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2186306
***
AD/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2186516)
வருகையாளர் எண்ணிக்கை : 21