புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சிறப்பு இயக்கம் 5 .0 வெற்றிகரமாக நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2025 4:53PM by PIB Chennai

புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற தூய்மை சிறப்பு இயக்கம் 5.0-, வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த ஆண்டு, அமைச்சகம் கடந்த ஆண்டின் செயல்பாட்டோடு ஒப்பிடுகையில், 27% அதிக தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்த அமைச்சகத்தின் அனைத்து கள அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தச் பிரச்சாரத்தின் போது, மின்னணு அலுவலக அமலாக்கம் மற்றும் பிஎப்எம்எஸ் இணையதளம் மூலம் பணம் செலுத்துதல் ஆகியவை அனைத்து கள அலுவலகங்களிலும் சிறந்த நடைமுறைகளாக ஊக்குவிக்கப்பட்டன. சிறப்புச் பிரச்சாரம் 5.0-ன் முன்னேற்றம், துறையின்  செயலாளர் வாயிலாக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. தினசரி முன்னேற்றங்கள் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள அமைச்சக அலுவலகங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட, துணை மற்றும் தன்னாட்சி அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு இயக்கம் 5.0-ன் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:

194 தளங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 3960 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது.

மின்னணு கழிவு மற்றும் அசல் இல்லாத பொருட்களை அகற்றியதன் மூலம் 7,71,984/- வருவாய் ஈட்டப்பட்டது.

மொத்தம் 66 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 23 கோப்புகள் நீக்கப்பட்டன.

மொத்தம் 89 மின்னணுக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 35 மின்னணுக் கோப்புகள் அழிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186296

***

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2186505) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी