சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள செம்மர சாகுபடி விவசாயிகளுக்கு ரூ. 3 கோடி நிதியை விடுவித்துள்ளது
Posted On:
04 NOV 2025 12:59PM by PIB Chennai
இந்தியாவின் பல்லுயிர்ப்பெருக்க ஆதாரங்களின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 கோடி ரூபாய் நிதியுதவியை தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் விடுவித்துள்ளது. இந்த நிதியுதவி ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த செம்மரம் பயிரிடும் 198 விவசாயிகள் மற்றும் ஆந்திரப் பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பல்லுயிர்ப்பெருக்கச் சட்டத்தின் கீழ் பரஸ்பரம் பயனடையும் வகையில், ஆந்திரப்பிரதேச மாநில பல்லுயிர் பெருக்க வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தால் பரஸ்பரம் நலன் சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த முன்முயற்சியை மேற்கொள்வதன் மூலம் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவிடும். முன்னதாக தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆந்திர மாநிலம் வனத்துறை, கர்நாடக மாநில வனத்துறை மற்றும் ஆந்திர மாநில பல்லுயிர்ப்பெருக்க வாரியம் ஆகியவற்றுக்கு செம்மரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு 48 கோடி ரூபாய் வழங்கியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 55 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியின் கீழ் ஒவவொரு பயனாளியும் அதாவது ஒவ்வொரு விவசாயும், 33000 ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெறமுடியும்.
மேலும் செம்மரக்கட்டைகளின் விற்பனைத் தொகையுடன் ஒப்பிடுகையில் பயனாளிகள் பெறும் தொகை கூடுதலாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2186160
***
AD/IR/KPG/RJ
(Release ID: 2186416)
Visitor Counter : 6