குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை அடைய, குணநலன் கட்டமைப்பு அவசியம்: குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

Posted On: 03 NOV 2025 6:35PM by PIB Chennai

கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஃபாத்திமா மாதா தேசியக் கல்லூரியின் வைர விழா கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், குணநலன் கட்டமைப்பு, அர்த்தமுள்ள மற்றும் நிறைவான வாழ்க்கையின் உண்மையான அடித்தளம் என்று வலியுறுத்தி,  இதனுடன்  இணைந்ததாகவே கல்வி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கல்வியின் மூலக்கல்லாக குணநலன் உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், சுய ஒழுக்கம், மற்றவர்களுக்கு சேவை செய்தல் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மதிப்புகளையும் வளர்ப்பதற்காக நிறுவனத்தை அவர் பாராட்டினார். இத்தகைய குணநலன்கள் தேசிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் திறன் கொண்ட குடிமக்களை உருவாக்குகின்றன, என்றார் அவர்.

உலகளவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான சவால்களில் ஒன்று போதைப்பொருள் அச்சுறுத்தல் என்றும், இது தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் மற்றும் மதுவை நிராகரிப்பதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கைகோர்க்க வேண்டும் என்றும், உடல் ஆரோக்கியம், தார்மீக வலிமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு. சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185985

(Release ID: 2185985)

***

AD/BR/SH


(Release ID: 2186087) Visitor Counter : 9