புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

4 நாள் சர்வதேச அறிவியல் திருவிழா சண்டிகரில் டிசம்பர் 6 முதல் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 02 NOV 2025 4:29PM by PIB Chennai

சண்டிகரில் 2025 டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி  வரை  நடைபெறவிருக்கும் இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழாக்கான ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்தார்.

2025 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற முந்தைய ஆய்வுக் கூட்டத்தின் விவாதங்களைத் தொடர்ந்து, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் பேசுகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் அணுகுமுறை அடிப்படையில் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் ஒரு சக்திவாய்ந்த தேசியக் கருத்தை இந்த ஆண்டு சர்வதேச அறிவியல் திருவிழா உருவாக்கும் என்று கூறினார்.

"இன்று அறிவியலே கொள்கையை வழிநடத்துகிறது. அறிவியல் கொள்கைக்காகக் காத்திருந்த நாட்கள் போய்விட்டன; இன்று, கொள்கைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்படுகின்றன," என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அறிவியல் தலைமையிலான நிர்வாகத்தை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உறுதியான முறையில் மாறியுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

அரசாங்கம் இப்போது கட்டுப்படுத்துபவராக இல்லாமல், ஊக்குவிப்பாளராக மாறியுள்ளது என்றும், தனியார் துறை, ஸ்டார்ட்அப்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆழமான தொழில்நுட்பம் (Deep Tech), செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு சூழலை உருவாக்கி வருகிறது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வு அமைச்சகங்கள், கல்வித்துறை, தொழில் துறை மற்றும் புத்தொழில்கள் முழுவதும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டாடும் என்றும், இது சுயசார்பு இந்தியா உணர்வைப் பிரதிபலிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்த ஆண்டு சர்வதேச அறிவியல் திருவிழாவானது நாட்டின் தற்சார்புக்குத் தூண்களாக மாறியுள்ள முக்கியத் துறைகளில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்த திருவிழா அறிவியல் பரிமாற்றத்திற்கான தளமாக மட்டுமல்லாமல், முக்கியத் தொழில்நுட்ப எல்லைகளில் இந்தியாவின் தற்சார்பைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், அணுசக்தித் துறையின் செயலாளர் டாக்டர் அஜித் குமார் மோஹந்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்  தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். விஞ்ஞான் பாரதி பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185525

***

AD/VK/RJ


(रिलीज़ आईडी: 2185605) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी