பாதுகாப்பு அமைச்சகம்
“வீர் யுவா: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இளைஞர்களை மேம்படுத்துதல்” என்ற இளம் தலைவர்கள் மன்றத்தை இந்திய ராணுவம் நடத்தியது
प्रविष्टि तिथि:
31 OCT 2025 5:20PM by PIB Chennai
இந்திய ராணுவம், நிலப் போர் ஆய்வுகளுக்கான மையத்துடன் (CLAWS) இணைந்து, 2025 நவம்பர் 27–28 தேதிகளில் திட்டமிடப்பட்ட சாணக்யா பாதுகாப்பு கலந்துரையாடல்(CDD) 2025 இன் மூன்றாவது பதிப்பிற்கு முன்னதாக, அக்டோபர் 31, 2025 அன்று புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் இளம் தலைவர்கள் மன்றத்தை (YLF) ஏற்பாடு செய்தது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், தேசிய ஒற்றுமை தினத்தன்று நடைபெற்ற இந்த மன்றம், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை உள்ளடக்கியிருந்தது. மாற்றத்தின் முன்னணிப் படையாக, 2047 இல் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பாதையில், இளைஞர்கள், தேசிய மாற்றத்தின் இயக்கிகள் மற்றும் பயனாளிகள் என்பதை இந்த மன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு; ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, பிரதமரின் 'வளர்ச்சியடைந்த பாரதம் @2047' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகளுக்காக சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மேஜர் பாப் காதிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்திய அவர், நாட்டின் நாகரிக வலிமை மற்றும் மீள்தன்மை குறித்து பிரதிபலித்தார். இளம் இந்தியர்கள் மற்றும் ராணுவத்தினரின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, 2047 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இடத்தை உறுதி செய்யும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184710
***
AD/RB/RJ
(रिलीज़ आईडी: 2185568)
आगंतुक पटल : 19