குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நவம்பர் 2 முதல் 4 வரை குடியரசுத்தலைவர் உத்தராகண்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 01 NOV 2025 6:28PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நவம்பர் 2 முதல் 4 வரை உத்தராகண்ட் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

நவம்பர் 2-ஆம் தேதி, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்வார்.

நவம்பர் 3-ஆம் தேதி, உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழாவையொட்டி, டேராடூனில் உள்ள உத்தராகண்ட் சட்டமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவார். அதே நாளில், நைனிடால் ராஜ்பவனின் 125-வது ஆண்டு நிறுவன விழாவிலும் அவர் கலந்து கொள்வார்.

நவம்பர் 4-ஆம் தேதி, கைஞ்சி தாமில் உள்ள நீம் கரோலி பாபா ஆசிரமத்திற்கு குடியரசுத்தலைவர் செல்வார். புதுதில்லி திரும்புவதற்கு முன், நைனிடாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்வார்.

***

(Release ID: 2185269)

AD/RB/RJ


(Release ID: 2185563) Visitor Counter : 6