திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மற்றும் சுயசார்பு கொண்ட பஸ்தியை உருவாக்குதல் திறன் மற்றும் தொழில்முனைவு மையமாக உருவெடுக்கும் உத்தரபிரதேசம்
Posted On:
31 OCT 2025 4:23PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தை திறன் அடிப்படையிலான வளர்ச்சி, உள்ளூர் தொழில்முனைவு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு மாதிரி மையமாக மாற்றியமைக்க, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி நேற்று பஸ்தியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, மாவட்டத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு முயற்சிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
24.6 லட்சம் மக்கள் தொகை கொண்ட பஸ்தி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் திறன் பயிற்சி மற்றும் தொழில் உருவாக்கத்தில் மிகச் சுறுசுறுப்பான மாவட்டங்களில் ஒன்றாக வேகமாக உருவாகி வருகிறது. இங்கு 4 அரசு ஐ.டி.ஐ-கள், 26 தனியார் ஐ.டி.ஐ-கள் உள்பட வலுவான நிறுவனக் கட்டமைப்பு உள்ளது. இவை ஆண்டுதோறும் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184638
***
AD/VK/SH
(Release ID: 2184971)
Visitor Counter : 3