சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நார்வே – இந்தியா கூட்டாண்மை முன்முயற்சியின் வருடாந்தரக் கூட்டம்
Posted On:
31 OCT 2025 2:42PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற நார்வே – இந்தியா கூட்டாண்மை முன்முயற்சியின் வருடாந்தரக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு இந்தியாவிற்கான நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனெர் இணைத்தலைவராக இருந்தார். நார்வே – இந்தியா கூட்டாண்மை முன்முயற்சியின் செயல்முன்னேற்ற அறிக்கை 2025-ஐ ஆய்வு செய்வதும் ஏற்பளிப்பதும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா, இணக்கமான முயற்சிகள் எவ்வாறு பயன்களை விளைவிக்கின்றன என்பதை நார்வே - இந்தியா கூட்டாண்மை முன்முயற்சி எடுத்துக்காட்டுவதாக கூறினார். விரும்பும் விளைவுகளை ஏற்படுத்த முழுமையான அரசு அணுகுமுறை மூலம் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184574
****
AD/SMB/AS/SH
(Release ID: 2184962)
Visitor Counter : 6