பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2025 12:58PM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கண்காணிப்பு ஆணையம், நிர்வாக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 27-ம் தேதி முதல் (27.10.2025) அடுத்த மாதம் 2-ம் தேதி வரை (02.11.2025) நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுச் சேவை மற்றும் மக்களுக்கு சேவையாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் கண்காணிப்புத் தொடர்பான நடவடிக்கைகைளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொள்வது உட்பட கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்பு ஆணையம், நேர்மையான நிர்வாகத்திற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கு இம்மாதம் 31-ம் தேதி நடைபெற உள்ளது. நேர்மையான நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவது நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துரைக்கும் நோக்கில் இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி நடத்தப்பட்டு வரும் இந்த ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊழலற்ற சமூகம் மற்றும் பொது வாழ்வில் கண்காணிப்பு மற்றும் நேர்மையான நிர்வாகத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
**
(Release ID: 2183667)
SS/SV/KPG/SH