சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்களை மையமாக கொண்ட உள்கட்டமைப்பு வேண்டும்: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி

Posted On: 28 OCT 2025 5:44PM by PIB Chennai

உள்கட்டமைப்பு வளர்ச்சி மக்கள் நலனை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் நலன், வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தொழிற்கூட்டமைப்பின் (சிஐஐ)  தேசிய மாநாட்டில், நவீன சாலைகளின் எதிர்காலம் - பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மை என்ற தலைப்பில் நடைபெற்ற  கருத்தரங்கில்  அவர் உரையாற்றினார்.

பிரதமரின் 2027-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றார். தற்போது அமைச்சகத்தின் ஆண்டு வருமானம் ரூ.55,000 கோடியாக உள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது ரூ.1.4 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

25,000 கி.மீ. தொலைவுக்கு இரு வழிச் சாலைகள் நான்கு வழிகளாக மாற்றப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும்  ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான துறைமுக இணைப்பு திட்டமும் முன்னேறுகிறது என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு ரூபாய் முதலீட்டும் மூன்று ரூபாய் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183405

(வெளியீட்டு அடையாள எண்: 2183405)

***

SS/VK/SH


(Release ID: 2183547) Visitor Counter : 5