சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மறுசீரமைப்பு கல்விக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
28 OCT 2025 1:32PM by PIB Chennai
மறுசீரமைப்பு கல்வி மற்றும் தொழில் ரீதியான நிர்வாகத்தில் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வகையில், இந்திய மறுசீரமைப்புக் குழுமம் நாடு முழுவதும் மறுசீரமைப்புச் சூழலில் வெளிப்படைத்தன்மை, திறன் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் மின்னணு மாற்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள், தொழில்வல்லுநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அதிகாரமளிக்க இந்த மறுசீரமைப்புக் குழுமம் உறுதி பூண்டுள்ளது.
முதல் முறையாக மத்திய மறுவாழ்வு பதிவு வெளியீடு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகுதிகளை சேர்த்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை முழுவதுமாக நீக்கி, மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான அனைத்து நடைமுறைகளையும் முழுவதும் கட்டணமின்றி செயல்படுத்துகிறது. மத்திய மறுசீரமைப்புப் பதிவின் செல்லத்தக்க காலம் 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 100 மற்றும் அதற்கு மேற்பட்ட தொடர் மறுசீரமைப்பு புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்காக தானியங்கி புதுப்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்கள் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை மூலம் கட்டணமின்றி ஆன்லைன் வழியில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். கல்வி நிறுவனங்கள் தொடர் மறுசீரமைப்புக் கல்வி திட்டங்களுக்காக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தொடர் மறுசீரமைப்புக் கல்வி திட்டங்களை நடத்துவதற்கு திறன் மேம்பாட்டு மையங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183258
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2183361)
आगंतुक पटल : 30