நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் சேவைகள் துறை குறித்து இரண்டு அறிக்கைகளை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது

Posted On: 28 OCT 2025 1:04PM by PIB Chennai

நித்தி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பி வி ஆர் சுப்பிரமணியம், சேவைகள் கருப்பொருள் தொடரின் கீழ் இரண்டு தொடக்க அறிக்கைகளை வெளியிட்டார். நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி, இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன.  இந்த நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

"இந்தியாவின் சேவைகள் துறை: ஜிவிஏ போக்குகள் மற்றும் மாநில அளவிலான இயக்கவியலின் நுண்ணறிவு" என்ற முதல் அறிக்கை, சேவைகள் சார்ந்த வளர்ச்சி, பிராந்தியங்களில் எவ்வாறு விரிவடைகிறது என்பதை விளக்குகிறது. தேசிய மற்றும் மாநில அளவிலான போக்குகளை இது ஆராய்கிறது. இது சமச்சீர் பிராந்திய வளர்ச்சியின் ஒரு முக்கிய குறிகாட்டியாகும்.

இந்தியாவின் சேவைகள் துறை: வேலைவாய்ப்பு போக்குகள் மற்றும் மாநில அளவிலான இயக்கவியலின் நுண்ணறிவுபற்றிய மற்றொரு அறிக்கை, துணைத் துறைகள், பாலினம், பிராந்தியங்கள், கல்வி மற்றும் தொழில்கள் முழுவதும் இந்தியாவின் சேவைப் பணியாளர்களின் பல பரிமாண சுயவிவரத்தை வழங்க, சேவைத் துறை வேலைவாய்ப்பை பகுப்பாய்வு செய்கிறது. இது ஒட்டுமொத்த போக்குகளுக்கு அப்பால் சென்று இந்தத் துறையின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183248

***

SS/PKV/KR


(Release ID: 2183323) Visitor Counter : 10