நிதி அமைச்சகம்
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை 'சிறப்பு இயக்கம் 5.0-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி, தூய்மை மற்றும் நிர்வாகச் செயல்திறனில் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.
प्रविष्टि तिथि:
27 OCT 2025 5:37PM by PIB Chennai
தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல் ஆகியவற்றை நிறுவனமயமாக்கும் நோக்கத்துடன், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை அக்டோபர் 2 முதல் 31, 2025 வரை 'சிறப்புச் இயக்கம் 5.0'-ஐ மேற்கொண்டது. இச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக, அலுவலக வளாகத்தில் விரிவான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், நிலுவையில் இருந்த உறுதியுரைகள் மற்றும் குறைகள் உள்ளிட்ட நிலுவைப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த முயற்சிகளின் விளைவாக, நிலுவையில் இருந்த அனைத்துக் குறைகளும் தீர்க்கப்பட்டுள்ளன.
நிர்வாகச் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், பழைய வாகனங்களை அகற்றுதல் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதன் மூலம் பெறப்பட்ட ரூ. 46,114 தொகை முறையாக அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர், இச்சிறப்புச் செயல்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து, வழிகாட்டினார். அவரது வழிகாட்டுதலின் கீழ், அதிகாரிகளும் பணியாளர்களும் இப்பணியில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்கின்றனர்.
***
(Release ID: 2182996)
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2183050)
आगंतुक पटल : 24