நிதி அமைச்சகம்
பொது நிறுவனங்கள் துறை சிறப்பு இயக்கம் 5.0-ல் பங்கேற்றுள்ளது
Posted On:
27 OCT 2025 2:30PM by PIB Chennai
பொது நிறுவனங்கள் துறை தூய்மையை தமது அலுவலக வளாகங்களில் உறுதிசெய்யவும், நிலுவைப் பணிகளுக்கு தீர்வு காணவும் சிறப்பு இயக்கம் 5.0-வை அமல்படுத்தி வருகிறது. சிஜிஓ வளாகத்திற்குள் தூய்மைப்பணியை மேற்கொண்டதுடன் அதன் சுற்றுப்புற அலுவலக பகுதிகளிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும் என்பதை பொது நிறுவனங்கள் துறை உறுதிசெய்தது.
முதற்கட்டம் (16.09.2025-30.09.2025): முன்னேற்பாட்டு பணிகள் – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள், அமைச்சகங்களுக்கு இடையேயான தகவல்கள், பொது மக்கள் குறைகள் போன்ற நிலுவையில் உள்ள பல்வேறு பணிகள் குறித்து கண்டறியப்பட்டது.
இரண்டாம் கட்டம் (02.10.2025-31.10.2025): செயல்படுத்தப்படும் பணிகள் – இக்கட்டத்தில் கண்டறியப்பட்ட நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காணுதல், தூய்மைப்படுத்துதல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2182874
***
SS/IR/AG/KR
(Release ID: 2182912)
Visitor Counter : 8