PIB Headquarters
பாஷ்மினாவிலிருந்து வாதுமைப்பழம் வரை: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் லடாக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன
Posted On:
22 OCT 2025 10:06AM by PIB Chennai
லடாக் பொருளாதாரம் என்பது அதன் தனித்துவமான புவியியல், கலாச்சாரம், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு லடாக்கின் வளமான பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கைவினைக் கலைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.
லடாக்கின் மிகவும் மதிப்புமிக்க பாரம்பரிய கைவினைப் பொருளான பாஷ்மினா கம்பளி அதன் வெம்மைக்கும், மிருது தன்மைக்கும், அழகுக்கும் பெயர் பெற்றது. இதற்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இறக்குமதி செய்யப்பட்ட அல்லது எந்திரத்தால் செய்யப்பட்ட கம்பளி பொருட்களுடன் போட்டியிட உதவியாக இருக்கும்.
இதே போல், கையால் நெய்யப்பட்ட கம்பளிகளுக்கும் ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்திருப்பது உற்பத்திச் செலவைக் குறைப்பதோடு பாரம்பரிய கைவினை நடைமுறைகளையும் ஊக்கப்படுத்தும்.
லே மற்றும் கார்கில் பகுதியில், பாரம்பரியமான சன்னல் சட்டங்கள், நாற்காலி போன்ற லடாக்கி மரச்சாமான்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் இதே அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவளிப்பதுடன் லடாக்கின் கலாச்சார மற்றும் கலையம்ச பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.
லே, ஆல்சி, ஹெமிஸ் போன்ற இடங்களில், பாரம்பரிய புத்தமத கலை வடிவங்களான லடாக்கின் தங்க்கா ஓவியங்களுக்கும் ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஓவியங்கள் எளிதாக கிடைப்பதோடு விலை மலிவாகவும் இருக்கும். இது லடாக்கின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
கார்கில், லே, நுப்ரா பள்ளத்தாக்குப் பகுதியில், வாதுமைப்பழ உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. இதற்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்திருப்பதால் 6,000-க்கும் அதிகமான வேளாண் குடும்பங்கள் பயனடையும். உலர்பழம், ஜாம், எண்ணெய் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் சந்தைப்படுத்த ஏதுவாகும். இதனால் வேளாண் குடும்பங்களின் வருவாய் வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181407
***
SS/SMB/KPG/RJ
(Release ID: 2181534)
Visitor Counter : 9