மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உலகத்தரத்திலான சக்தி வாய்ந்த கணினி பயன்பாட்டை ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலருக்கும் குறைவான கட்டணத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் – மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா
प्रविष्टि तिथि:
17 OCT 2025 3:13PM by PIB Chennai
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சிமாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி அதன் முன்னோட்டமாக உத்தராகண்ட் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப தாக்கம் 2025 என்ற உச்சிமாநாட்டில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இன்று (17.10.2025) தொடங்கி வைத்தார்.
உத்தராகண்ட் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயக்கம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கம் குறித்த உச்சிமாநாடு புதுதில்லயில் உள்ள பாரத் மண்டபத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுப்புணர்வுடன் செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு இம்மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். இந்தியாவில் உலகத்தரத்திலான சக்திவாய்ந்த கணினி பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலருக்கும் குறைவான கட்டணத்தில் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் கற்பனைக்கும் எட்டாத நிலையில் உள்ள செயல்பாடுகள் தற்போது சாத்தியமாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நம்பிக்கை, திறன் மற்றும் தலைமைத்துவ பண்பு ஆகியவற்றுடன் கூடிய புதிய இந்தியா உலக அளவிலான தொழில்நுட்ப பயன்பாட்டினால் ஏற்படும் தாக்கங்களுக்கு தீர்வு கண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180303
***
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2180608)
आगंतुक पटल : 21