நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகம் சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் கீழ் தூய்மை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மைக்கு உந்துதல் அளிக்கிறது
प्रविष्टि तिथि:
17 OCT 2025 4:36PM by PIB Chennai
சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் ஒரு பகுதியாக, நிலக்கரி அமைச்சகமும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தச் செயல்பாடுகள் நிலக்கரித் துறையெங்கும் தூய்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கின்றன.
அக்டோபர் 2 முதல் 31, 2025 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரத்தில், 40,86,545 சதுர அடி பரப்பளவிலான 802 இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. 8,678 மெட்ரிக் டன் இலக்குக்கு எதிராக 4,763 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, ரூ. 20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், 73,756 ஆவணக் கோப்புகள் மற்றும் 18,719 மின்னணுக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 15,089 கோப்புகளுக்கு தீர்வு அளிக்கபட்டுள்ளது.
மேற்கு நிலக்கரி நிறுவனத்தில் பயோ கழிவறைகள் திறக்கப்பட்டது, நெய்வேலி லிக்னைட் சுரங்க நிறுவனத்தின் பழைய பொருட்கள் அறை "கற்றல் மையமாக" மாற்றபட்டுள்ளது, மற்றும் "மின்னணுக் கழிவுகளிலிருந்து கலை" என்ற பட்டறை போன்ற புதுமையான சிறந்த நடைமுறைகள் இத்துறையின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180366
***
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2180550)
आगंतुक पटल : 18