விவசாயத்துறை அமைச்சகம்
'ஒவ்வொரு துளி நீரும் முக்கியம்': நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மாநிலங்களுக்கு எளிதாக்கப்பட்ட பிடிஎம்சி திட்டம்
Posted On:
16 OCT 2025 3:25PM by PIB Chennai
திறமையான நீர் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை ஓவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்' (பிடிஎம்சி) திட்டம் எளிதாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி நுண்ணிய அளவிலான நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரமளிக்கிறது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இப்போது உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் நுண்ணிய அளவிலான நீர் மேலாண்மை நடவடிக்கைகளை - டிக்கி அமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் போன்றவற்றை - திட்டமிடலாம். இந்த அமைப்புகள் தனிப்பட்ட விவசாயிகளுக்கும், சமூகப் பயன்பாட்டிற்கும் உருவாக்கப்படலாம், இதன் மூலம் நுண்ணீர்ப் பாசனத்திற்கு நிலையான தண்ணீர் கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்படுகிறது.
முன்பு, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கான நிதி ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 20% மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு 40% ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தங்களுடைய குறிப்பிட்ட தேவைகளின்படி இந்த வரம்புகளை மீறி செலவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத்தை பின்பற்றவும், நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும், இறுதியில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
வெளியீட்டு அடையாள எண் 2179856
AD/VK/SH
(Release ID: 2180168)
Visitor Counter : 13