அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆசியா- பசிபிக் பிராந்தியத்திற்கான ஐநா சர்வதேச புவிசார் தகவல் மேலாண்மை பிராந்திய குழு இணைத் தலைவராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது
Posted On:
16 OCT 2025 3:44PM by PIB Chennai
ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐநா சர்வதேச புவிசார் தகவல் மேலாண்மை பிராந்திய குழு இணைத் தலைவராக இந்திய பிரதிநிதியான இந்திய தலைமை நில அளவர் திரு ஹித்தேஷ்குமார் மக்வானா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 24 முதல் 26ம் தேதி வரை கொரியாவில் உள்ள கொயாங்-சி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த பெருமைமிகு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் உறுப்புநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டு ஆசியா-பசிபிக் பகுதியில் புவிசார் தகவல் மேலாண்மையில் உள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இதன் முழு அறிக்கை அதற்கான செயல்வாரிய குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பணிக்குழுக்கள், கூட்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகளின் நிலை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐநா சர்வதேச புவிசார் தகவல் மேலாண்மை மண்டல குழு இணைத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தையும், புதுமை கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு, பிராந்திய ஒத்துழைப்பு போன்றவற்றில் இந்தியாவின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 3 ஆண்டு கால இந்த பதவிக்காலத்தில் இந்தியா உத்திசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179872
***
SS/SV/AG/SH
(Release ID: 2180095)
Visitor Counter : 5