தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அதிநவீன போக்குவரத்து திட்டத்திற்கான டிஜிட்டல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் பசுமை வழித்தடம் குறித்த நான்கு நாள் கண்காட்சி
प्रविष्टि तिथि:
16 OCT 2025 2:49PM by PIB Chennai
தொலைத் தொடர்புத்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை காட்சிப்படுத்தியது. தொலைத் தொடர்பு, கணினி பயன்பாடு மற்றும் தொலையுணர்வு சாதனங்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இன்றைய சூழலுக்கான தேவைகளுடன் எதிர்காலத்திற்கான கட்டமைப்பு வசதிகளை வடிவமைப்பதில் தெளிவான திட்டங்களை உருவாக்க இந்த முயற்சி வகைசெய்கிறது. தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும், அதனை இறுதிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் இதுபோன்ற கண்காட்சிகள் உதவுகின்றன.
இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நான்கு நாள் கண்காட்சி துறைசார்ந்த கொள்கை வகுப்பாளர்கள், திட்ட நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் நிபுணர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் போன்ற பல்வேறு துறையினரை வெகுவாக ஈர்த்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், நோக்கியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்கள் வடிமைக்கப்பட்டு வருகிறது.
தொலைத் தொடர்பு சாதனங்களுடன் இணைக்கப்பட்ட தரவுகளுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பசுமை வழித்தடம் அமைப்பது போன்றவற்றிற்கு இதுபோன்ற கண்காட்சிகள் உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179837
***
SS/SV/AG/SH
(रिलीज़ आईडी: 2180093)
आगंतुक पटल : 22