புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
உத்தரபிரதேச மாநில புள்ளிவிவர அமைப்பை வலுப்படுத்த தேசிய புள்ளிவிவர ஆணையத்துடன் ஆலோசனை
प्रविष्टि तिथि:
15 OCT 2025 2:45PM by PIB Chennai
தேசிய புள்ளிவிவர ஆணையம் (என்எஸ்சி) உத்தரபிரதேச அரசாங்கத்துடன் 2025 அக்டோபர் 14 அன்று லக்னோவில் கலந்துரையாடல் அமர்வை நடத்தி, மாநிலத்தின் புள்ளிவிவர அமைப்பை மதிப்பாய்வு செய்தது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் தரம், நேரமின்மை மற்றும் முறையியல் நிலைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வது கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
என்எஸ்சி தலைவர் பேராசிரியர் ராஜீவா லக்ஷ்மண் கரண்டிகர், உறுப்பினர்கள், மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை உறுப்பினர் செயலாளர் டாக்டர் சௌரப் கர்க் மற்றும் உத்தரபிரதேச அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநர் திருமதி அல்கா பகுகுனா தௌண்டியால், வளர்ச்சியடைந்த உத்தரபிரதேசம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை அடைய துல்லியமான தரவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
முதன்மை செயலாளர் ஸ்ரீ அலோக் குமார், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார திட்டத்தை விளக்கி, சமர்த் யுபி வலைத்தளம், குடும்ப அடையாள தரவுத்தளம் மற்றும் பெண்கள் பொருளாதார மேம்பாட்டு குறியீடு போன்ற முயற்சிகளை பகிர்ந்துகொண்டார்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மதிப்பீடு முன்னேற்றம், மற்றும் கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் பொருளாதார தாக்க மதிப்பீடு குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.
நிர்வாக தரவு ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் தளங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை டாக்டர் கர்க் வலியுறுத்தினார்.
என்.எஸ்.சி உறுப்பினர்கள் உத்தரபிரதேசத்தின் நவீனமயமாக்கல் முயற்சிகளை பாராட்டி, தொடர்ந்து தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்க உறுதியளித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179356
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2179654)
आगंतुक पटल : 13