ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஜகார்த்தாவில் மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

प्रविष्टि तिथि: 15 OCT 2025 2:31PM by PIB Chennai

உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பின் 16-வது ஆண்டு கூட்டம் 2025 அக்டோபர் 14 முதல் 16 வரை இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. மூலிகை மருந்துகளின் ஒழுங்குமுறையில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு உலகளாவிய ஒழுங்குமுறை பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவின் சார்பில் ஆயுஷ் அமைச்சகத்தின் துணைத் தலைமை இயக்குநரும், ஆலோசகருமான (ஆயுர்வேதம்) டாக்டர் ரகு அரக்கல் தலைமையிலான பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் சிறப்பான பங்களிப்பை செய்தனர். இந்நிகழ்ச்சியின் 2-ம் நாளன்று தொழில்நுட்ப அமர்வின் போது  இக்குழு முக்கிய பங்காற்றியது. மூலிகை மருந்துகளின் செயல்திறன், பயன் குறித்த பயிலரங்கு அறிக்கையை டாக்டர் ரகு அரக்கல் சமர்ப்பித்தார்.

மூலிகை மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை குறித்த பயிலரங்கு அறிக்கையை இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணைய இயக்குநர் டாக்டர் ராம்மோகன் சிங் சமர்ப்பித்தார்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய இரண்டு பயிலரங்குகளையும் உலக சுகாதார அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179343  

***

SS/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2179593) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi