வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான இந்தியாவில் மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)
Posted On:
14 OCT 2025 12:00PM by PIB Chennai
அகில இந்திய மொத்தவிலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுப் பணவீக்க விகிதம் 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான (2024 -ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.13% - ஆக (தற்காலிகம்) உள்ளது. 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் நேர்மறையாக உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் முதன்மையாக உணவுப் பொருட்கள், இதர பொருட்களின் உற்பத்தி, உணவுப்பொருள் அல்லாத பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள், ஜவுளிகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. அனைத்து பொருட்கள் மற்றும் மொத்த விலைக் குறியீடு தொடர்பான அம்சங்களின் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க விகிதம் கீழே தரப்பட்டுள்ளது:
குறியீட்டு எண்கள் மற்றும் ஆண்டுப் பணவீக்க விகிதம் (வருடாந்தர சதவீதத்தில்) *
|
அனைத்து பொருட்கள் / முக்கிய தொகுப்புகள்
|
அடிப்படை (%)
|
ஜூலை-25
(இறுதி)
|
ஆகஸ்ட்-25 (தற்காலிகம்)
|
செப்டம்பர்-25 (தற்காலிகம்)
|
குறியீடு
|
பணவீக்கம்
|
குறியீடு
|
பணவீக்கம்
|
குறியீடு
|
பணவீக்கம்
|
அனைத்து பொருட்கள்
|
100
|
154.4
|
-0.58
|
155.2
|
0.52
|
154.9
|
0.13
|
I. முதன்மைப் பொருட்கள்
|
22.62
|
188.5
|
-4.70
|
191.0
|
-2.10
|
189.0
|
-3.32
|
II. எரிபொருள் & மின்சாரம்
|
13.15
|
143.7
|
-3.04
|
143.6
|
-3.17
|
143.4
|
-2.58
|
III. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்
|
64.23
|
144.6
|
2.05
|
144.9
|
2.55
|
145.2
|
2.33
|
உணவுக் குறியீடு
|
24.38
|
191.4
|
-2.10
|
193.5
|
0.21
|
192.0
|
-1.99
|
2025 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணில் மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் (-) 0.19% -ஆக இருந்தது.
மொத்த விலைக் குறியீட்டு எண் தொடர்பான முக்கிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளில் மாதாந்திர மாற்றங்கள்:
முதன்மை பொருட்கள் (அடிப்படை 22.62%): - இந்த முக்கிய பொருட்கள் அடங்கிய தொகுப்பின் குறியீடு 2025 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.05% குறைந்து 191.0 - ஆகவும் (தற்காலிகம்) 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 189.0 - ஆகவும் (தற்காலிக) இருந்தது. 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை (-1.38%) அளவுக்கும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-1.06%) அளவுக்கும் குறைந்துள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விலை (0.64%) அளவுக்கும் கனிமங்கள் விலை (1.36%) அளவுக்கும் அதிகரித்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் (அடிப்படை 13.15%): - முக்கிய பொருட்களுக்கான தொகுப்பு மொத்த விலைக் குறியீடு 2025 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 143.6 (தற்காலிகம்) என்பதிலிருந்து 0.14% குறைந்து 2025 செப்டம்பர் மாதத்தில் 143.4 ஆக (தற்காலிகம்) இருந்தது. 2025 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கனிம எண்ணெய் பொருட்கள் (-0.54%) - ஆகவும், நிலக்கரி (-0.15%) ஆகவும் விலை குறைந்துள்ளது. 2025 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின்சாரத்தின் விலை (1.20%) அதிகரித்துள்ளது.
2025 அக்டோபர் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் பற்றிய செய்திக்குறிப்பு 14.11.2025 அன்று வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178775
***
SS/SMB/AG/SH
(Release ID: 2179112)
Visitor Counter : 5