தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ராஜஸ்தானில் மொபைல் வலையமைப்பு தரம் குறித்த சோதனையை ட்ராய் நடத்தியது
Posted On:
14 OCT 2025 1:16PM by PIB Chennai
ராஜஸ்தானில் ஜெய்பூர் - உதய்பூர் ரயில் வழித்தடம் மற்றும் உதய்பூர், ராஜ்சமந்த் நகரில் மொபைல் வலையமைப்பு தரம் குறித்து இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மதிப்பீடு செய்தது. 2025 செப்டம்பர் மாதத்திற்கான இந்த சோதனையின் போது அழைப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றத்தின் வேகம், உரையாடல் தரம் ஆகியவை தொடர்பான தன்னிச்சையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி, வலையமைப்புகளைச் சேர்ந்த சிம்கார்டுகளின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜெய்ப்பூரிலிருந்து உதய்பூர் வரை 430.7 கிமீ தொலைவிலான ரயில் வழித்தடத்தில் மொபைல் தரம் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2025 செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற்ற இந்த சோதனையின் போது, உதய்பூர் மற்றும் ராஜ்சமந்த் நகரில் 10 முக்கியப் பகுதிகளில் மொபைல் தரம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விவரங்கள் www.trai.gov.in. என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178819
***
SS/IR/KPG/SH
(Release ID: 2179083)
Visitor Counter : 7