தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் சேலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்துள்ளது

Posted On: 14 OCT 2025 1:13PM by PIB Chennai

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகஸ்ட் 2025-ல் தமிழ்நாட்டில் உரிமம் பெற்றுள்ள  சேலம் நகரை உள்ளடக்கிய சேவைப்பகுதிகளில் சுயேச்சையான இயக்கச் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தச் சோதனைகள் ஆணையத்தின் ஐதராபாத் வட்டார அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டன.

2025 ஆகஸ்ட் 11 முதல் 14 வரை டிராய் குழுக்கள் சேலம் நகரில் 410 கி.மீ. தூரத்திற்கு இயக்க முறையிலும், 5.8 கி.மீ. தூரத்திற்கு நடந்தும் சோதனைகளை மேற்கொண்டன. மேலும் 8 இடங்களில் பயனர்கள் கருத்தறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

சேலம் நகரில் வெண்ணந்தூர், வீரபாண்டி, மகுடஞ்சாவடி, கரிக்காப்பட்டி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், நதிமேடு, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, பேலூர், சேஷன்சாவடி போன்ற இடங்களில் இயக்கமுறை சோதனைகள் நடத்தப்பட்டன. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்து சென்று சோதனை நடத்தப்பட்டது.

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகம், எஃகு ஆலை, அரசு மருத்துவமனை போன்றவற்றில் பயனர் அனுபவம் நிகழ்நேர முறையில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த சோதனைகளின் விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற டிராய் இணைய தளத்தில் கிடைக்கும். மேலும் விளக்கம் அல்லது தகவல்களுக்கு டிராய் ஆலோசகர் திரு பி பிரவீன் குமாரை தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல் – adv.hyderabad@trai.gov.in தொலைபேசி எண். +91-40-23000761.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178816   

***

SS/SMB/AG/KR


(Release ID: 2179004) Visitor Counter : 6