ஆயுஷ்
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் இளம் ஆயுர்வேத ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை திட்டம்
प्रविष्टि तिथि:
10 OCT 2025 12:47PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், இளங்கலை ஆயுர்வேத மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தின் நான்காவது பதிப்பான ஸ்பார்க் 4.0 (2025–26)-ஐ அறிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள இளங்கலை ஆயுர்வேத மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் மற்றும் ஆராய்ச்சித் திறனைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய இந்திய மருத்துவ முறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் 300 இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 வீதம் ரூ.50,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பதிவு செய்யும் கால அவகாசம் அக்டோபர் 15, 2025 அன்று தொடங்குகிறது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15, 2025 ஆகும்.
மேலும் விவரங்கள் மற்றும் முக்கிய தேதிகளை அறிந்துகொள்ள, மாணவர்கள் அதிகாரப்பூர்வ திட்ட இணையதளமான https://spark.ccras.org.in/ பார்வையிடலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177235
***
(Release ID: 2177235)
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2178815)
आगंतुक पटल : 31