PIB Headquarters
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மிசோரம் மாநிலத்தின் வளமைக்கும் சாகுபடி வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது
Posted On:
13 OCT 2025 4:06PM by PIB Chennai
மிசோரம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதன் வனப்பகுதி மற்றும் விவசாயத்தைச் சார்ந்துள்ளது. அம்மாநிலத்தில் இயற்கை முறையிலான மசாலாப் பயிர் வகைகள், தோட்டக்கலைப் பயிர்கள், மூங்கில் மற்றும் சூழல் சுற்றுலா ஆகியவை அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளாகும். தனித்துவம் வாய்ந்த நிலப்பரப்பைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில், பாரம்பரிய விவசாய நடைமுறைகள், அதன் விளைபொருளுக்கு தனித்துவ அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது. புவிசார் குறியீடு அடிப்படையிலான மிசோப் பறவைக்கண் மிளகாய், அதன் தரம் மற்றும் சுவை தனித்துவம் வாய்ந்ததாகும். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் இத்துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு வரிச்சுமைகளைக் குறைத்து வருவாய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் இந்த சீர்த்திருத்த நடவடிக்கைகள் அம்மாநிலத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள், தொழில்முனைவோர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அம்மாநிலத்தில் விளைவிக்கப்படும் மிசோ மிளகாய், இஞ்சி, மஞ்சள், மூங்கில் மற்றும் பிரம்பு தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட பழவகைகள், சுற்றுலா சேவைகள் போன்ற முக்கிய துறைகளுக்கு குறைந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் தயாரிக்கப்படும் சரக்குகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதற்கு ஊரகப் பகுதிகள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்கும் உதவிகரமாக உள்ளது.
புவிசார் குறியீட்டுடன் இயற்கை முறையில் பயிரிடப்படும் மிசோ மிளகாய் அம்மாநிலத்தின் தனிச்சிறப்புக் கொண்ட வேளாண் விளைபொருளாக உள்ளது. இது லுங்லே, சியாகா, லாங்த்லாய் ஆகிய மாவட்டங்களில் விளைவிக்கப்படுகிறது. இம்மாவட்டங்களில் இந்த மிளகாய் விளைச்சலுக்கான மண் வளமும், பருவநிலையும் சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178461
***
SS/SV/KPG/SH
(Release ID: 2178691)
Visitor Counter : 3