இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சோனிபட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா ஆய்வு

Posted On: 12 OCT 2025 4:43PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்திற்கு இன்று (12.10.2025) சென்றார். அங்கு நடைபெறும் பயிற்சி நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், துணை ஊழியர்களுடன் அவர் கலந்துரையாடினார். அமைச்சரை மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். சோனிபட் வளாகத்தின் செயல்பாடுகள், சாதனைகள், புதிய திட்டங்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கினர்.

மத்திய அமைச்சர், அங்குள்ள வில்வித்தை சிறப்பு மையத்தை ஆய்வு செய்தார். அங்கு அவர் பயிற்சியாளர்களுடனும் விளையாட்டு வீரர்களுடனும் கலந்துரையாடினார். அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முயற்சியின் கீழ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் திரு மன்சுக் மண்டவியா பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் வில்வித்தை மைதானம், கபடி மைதானம், மருத்துவ மையம், மல்யுத்த அரங்கம், அங்குள்ள விளையாட்டு அறிவியல் துறை ஆகியவற்றைப் பார்வையிட்டார். அங்கு தரப்படும் பயிற்சிகளையும் அங்குள்ள வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பல்நோக்கு அரங்கம், உயர் செயல்திறன் மையம், கபடி உள் விளையாட்டு  அரங்கம் ஆகியவற்றையும் அமைச்சர் ஆய்வு செய்தார். நமது விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காக குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, வலுவான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க அரசு முக்கியத்துவம் அளிப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.

***

(Release ID: 2178094)

AD/PLM/SG

 


(Release ID: 2178167) Visitor Counter : 7