சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அபுதாபியில் நடைபெற்ற ஐயூசிஎன் மாநாட்டில் மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பு

நிலையான, இயற்கைக்கு உகந்த நகர்ப்புற மேம்பாடு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை - திரு கீர்த்தி வர்தன் சிங்

Posted On: 11 OCT 2025 6:36PM by PIB Chennai

மக்கள் நலன் பூமியின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட நிலையான, இயற்கைக்கு சாதகமான நகர்ப்புற வளர்ச்சியே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் கூறியுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பான ஐயூசிஎன் மாநாட்டில் 'நமது நகர்ப்புற சூழலை மாற்றியமைத்தல்: நிலைத்தன்மைக்கான பாதைகள்' என்ற உயர்மட்ட உரையாடலில் அவர் பங்கேற்றார்.

 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிந்தனையில் உருவான 'சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம்' ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார்இது உலகம் முழுவதும் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக செயல்படுகிறது என அவர் கூறினார். இந்திய அரசின் அணுகுமுறை, ஒருங்கிணைந்த திட்டமிடல், பணிகள், ஆகியவை மக்களை மையமாகக் கொண்ட மாற்றத்தை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

சரியான தொலைநோக்குப் பார்வை, நிதி, மக்கள் ஈடுபாடு ஆகியவற்றுடன் கூடிய நகரமயமாக்கல், உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த உந்து சக்தியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் சில தேசிய திட்டங்களைப் பற்றி அவர் பேசினார். 100 நகரங்களை உள்ளடக்கிய நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம், மத்திய நிதியுதவியுடன் உள்ளூர் திட்டமிடலை இணைத்து செயல்படுத்தப்படுவதாக கூறினார். இந்தியா உட்பட உலகளாவிய தென் பகுதி நாடுகள் வேகமாக நகரமயமாகி வருவதாகவும், பசுமையான நகரங்களை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றும் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.

***

(Release ID: 2177861)

AD/PLM/RJ


(Release ID: 2177929) Visitor Counter : 4