பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹெச்எம்ஏஎஸ் குத்தாபுல் ஆஸ்திரேலிய கடற்படைத் தளத்தை மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 10 OCT 2025 5:17PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவின் சிட்னியின் ஹெச்எம்ஏஎஸ் குத்தாபுல் கடற்படைத் தளத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று நேரில் பார்வையிட்டார். சிட்னி துறைமுகத்தில் உள்ள அதிநவீன வசதிகள்‌ பற்றி ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு உதவி அமைச்சர் திரு பீட்டர் கலீல் பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கினார். இந்த விஜயம் இரு நாடுகளின் கடல்சார் படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் இணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது.

பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே தொழில்துறை கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக, திரு பீட்டர் கலீலுடன் இணைந்து, இந்திய-ஆஸ்திரேலிய முதலாவது பாதுகாப்புத் தொழில் வர்த்தக வட்டமேசை மாநாட்டிற்கு திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். பாதுகாப்புத் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் புதுமைகளில் வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, குறிப்பாக ‘இந்தியாவில் உற்பத்தி செய்தல்’ மற்றும் 'தற்சார்பு இந்தியா' கட்டமைப்புகளில்  இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின.

மாலையில், சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நடத்திய சிறப்பு நிகழ்வில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார பாலத்தை வலுப்படுத்துவதில் இந்திய சமூக உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றி பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177414

(Release ID: 2177414)

***

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2177632) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी