நித்தி ஆயோக்
நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகளுடன் கூடிய வரி சீர்திருத்த நடவடிக்கைகள்: நித்தி ஆயோக்
प्रविष्टि तिथि:
10 OCT 2025 1:08PM by PIB Chennai
மேம்பட்ட சான்றுகள் அடிப்படையிலான வரி சீர்திருத்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்பட்டு வரும் நிலையில் நித்தி ஆயோக் இன்று வரிக் கொள்கைகள் குறித்த 2-வது வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. குற்றமாகக் கருதப்படாத மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்துடன் கூடிய இந்தியாவின் வரி சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
வரி நிர்வாக நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையை ஒருங்கிணைத்து நவீன முறையில் எளிமைப்படுத்தும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நித்தி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு பி வி ஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள், விகிதாச்சாரம், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அமலாக்க செயல்பாடுகள், வரி செலுத்துவோருக்கான பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரிக் கட்டமைப்பிற்கான இணக்க நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றவியல் சார்ந்த பிரிவுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் தேவை விகிதாச்சாரம் அடிப்படையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இணக்க நடைமுறைகளை முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட சில குறைபாடுகள் குற்றமற்றதாக கருதப்படும் வகையில் விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நடைமுறைக்கு சாத்தியமில்லாத பழமையான சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள் வரி தொடர்பான வழக்குகளை குறைப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக திரு சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177256
***
SS/SV/SG/SH
(रिलीज़ आईडी: 2177519)
आगंतुक पटल : 24