சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
2027-க்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய இந்தியா இலக்கு : மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி
प्रविष्टि तिथि:
09 OCT 2025 6:21PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் 2027-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற பிஎச்டி வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் 120-வது ஆண்டு அமர்வில் அவர் உரையாற்றினார். உடல் முன்னேற்றத்துடன் சேர்ந்து, நன்னெறி, பொருளாதாரம், சுற்றுச்சூழல் என்ற மூன்று முக்கிய தூண்கள் தேசிய வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் அனைத்து துறைகளிடையே ஒருங்கிணைந்த சிந்தனை, ஒருங்கிணைப்பு மற்றும் அணுபவ பகிர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ஆட்டோமொபைல் துறையின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, தற்போதைய அரசு 2014-ல் பதவியேற்றபோது, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையானது 14 லட்சம் கோடி ருபாய் மதிப்பீட்டில் உலகளவில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. தற்போது ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், எல்என்ஜி, எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள்கள் போன்ற மாற்று எரிபொருட்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் ஏற்றுக்கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டால், இந்தியா ஐந்தாண்டுகளுக்குள் உலகளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னணி நாடாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாற்று எரிபொருள்களின் பயன்பாடு 22 லட்சம் கோடி ருபாய் மதிப்புடைய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். எத்தனால் உற்பத்தி கொள்கை சீர்திருத்தங்கள் கோதுமையின் சந்தை விலையை அதிகரித்துள்ளது, குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் விவசாயிகளுக்கு நன்மை அளித்து, அவர்களின் வருமானத்தில் 45,000 கோடி ரூபாயை சேர்த்துள்ளது என்று விளக்கினார். இறக்குமதி குறைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு அதிக வளர்ச்சி, மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயம், உற்பத்தி, மற்றும் சேவைத் துறைகள் முழுவதிலும் சமச்சீரான வளர்ச்சி அவசியம் என்று திரு கட்கரி வலியுறுத்தினார். விவசாயம் மற்றும் தொடர்புடைய துறைகளின் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் முக்கியத்துவம் கொடுக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வெளியீட்டு அடையாள எண்: 2176932
***
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2177088)
आगंतुक पटल : 17