மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர்கல்வித் துறைச் செயலர், தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 5.0-ன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 08 OCT 2025 4:24PM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ், கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் செயலர் டாக்டர் வினீத் ஜோஷி, மூத்த அதிகாரிகளுடன் அக்டோபர் 8, 2025  அன்று, சாஸ்திரி பவனில் உள்ள கல்வித் துறை அலுவலக வளாகத்தில் சிறப்பு இயக்கம் 5.0-ன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

 

இந்த இயக்கம் அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறுகிறது, இதன் ஒரு பகுதியாக நிலுவையில் உள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், பொதுக் குறைகள் போன்ற நிலுவையில் உள்ள கோப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 செப்டம்பர் 15 முதல் 30 வரை நடைபெற்ற ஆயத்த கட்டத்தில், மத்திய நிதியுதவி நிறுவனங்கள், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் தலைவர்கள் தூய்மை, கோப்பு மேலாண்மை மற்றும் பழைய பொருட்களை அகற்றுவதற்கான இலக்குகளை நிர்ணயித்தனர்.உயர்கல்வித் துறை இந்த சிறப்பு இயக்கம் 5.0-ஐ வெற்றி பெறச் செய்வதிலும், முந்தைய 4.0 இயக்கத்தின் சாதனைகளைவிட அதிகமாகச் சாதனைகளைப் படைக்கவும் உறுதிபூண்டுள்ளது.

 

(Release ID: 2176320)

SS/SE/KR


(रिलीज़ आईडी: 2176692) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi