தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக தொழில்நுட்பத்துறையில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது- மத்திய அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர்

प्रविष्टि तिथि: 08 OCT 2025 2:35PM by PIB Chennai

புதிய கண்டுபிடிப்புகளுக்கான செயல்பாடுகளை மக்கள் இயக்கமாக இந்தியா மாற்றி கொண்டு வருகிறது என்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் இன்று நடைபெற்ற இந்திய மொபைல் மா நாட்டிற்கு இடையே நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய  அவர்  எளிதில் அணுக்கக் கூடிய வகையிலும் உள்ளடக்கிய, சர்வதேச அளவில் போட்டித் தன்மையுடன் கூடிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அடல் சிந்தனை ஆய்வகங்கள் முதல் ஸ்டார்ட் அப் இந்தியா வரை, டிஜிட்டல் இந்தியா முதல் தற்சார்பு இந்தியா வரை அனைத்து முன்முயற்சிகளும் அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறன்கள் நமது டிஎன்ஏ-வில் இருப்பதாகவும் புதிய நூற்றாண்டுக்கான எழுச்சியாகவும் இது அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பில் இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று கூறிய அவர், 1.9 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

2014-ம் ஆண்டில் 40 ஆயிரமாக இருந்த காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை தற்போது 80 ஆயிரமாக இரட்டிப்பாகியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176231

 

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2176579) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi