PIB Headquarters
azadi ka amrit mahotsav

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 5.19 சதவீதமாக அதிகரித்துள்ளது

प्रविष्टि तिथि: 07 OCT 2025 1:23PM by PIB Chennai

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 5.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது வர்த்தக துறைக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஏற்றுமதி 4.77 சதவீதமாக இருந்தது.

இந்த ஏற்றுமதி நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 346.10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

வர்த்தகம் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 2.31 சதவீதமாகவும், சேவைகள் ஏற்றுமதி 8.65 சதவீதமாகவும் உள்ளது.

ஹாங்காங், சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், பெல்ஜியம், பங்களாதேஷ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து வருவது உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பட்டுப்பாதையில் தொடங்கி உலக மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு பிந்தைய காலம் வரை உணவுப் பொருட்கள், ஜவுளி முதல் தொழில்நுட்பம் வரை, மருந்துகள் முதல் பொறியியல் சாதனங்கள் வரை என பல்வேறு துறைகளில் ஏற்றுமதி நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளன.

உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் உலக அளவில் ஏற்றுமதி விகிதம் 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்தியாவின் ஏற்றுமதி 7.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடந்த 2015-ம் ஆண்டு 19.8 சதவீதமாக இருந்த ஏற்றுமதி 2024-ம் ஆண்டில் 21.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.  நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் நாட்டின் வர்த்தக செயல்பாடுகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175702 

***

 AD/SV/AG/SH


(रिलीज़ आईडी: 2175979) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Nepali , Bengali , Gujarati , Odia , Kannada