மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தூய்மை, திறன் மேம்பாடு மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளை அகற்றுவதற்கான சிறப்பு பிரச்சாரம் 5.0-ல் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைகிறது
प्रविष्टि तिथि:
06 OCT 2025 3:01PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அதன் கீழ் இயங்கும் அலுவலகங்களுடன் இணைந்து, சிறப்பு பிரச்சாரம் 5.0-ல் அக்டோபர் 2 முதல் 31, 2025 வரை பங்கேற்கிறது. அரசு அலுவலகங்களில் தூய்மையை நிலைநிறுத்துதல், நிலுவையில் உள்ள கோப்புகளை அகற்றுதல் மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
செப்டம்பர் 16 முதல் 30 வரை நடைபெற்ற ஆயத்த கட்டத்தில், பழைய ஆவணங்கள், மின்-கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்கள் அகற்றலுக்காகப் பட்டியலிடப்பட்டன. மேலும், பொதுக் குறைகள் மற்றும் நாடாளுமன்ற/பிரதமர் அலுவலகக் கோரிக்கைகள் போன்ற நிலுவையில் உள்ள கோப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் கீழ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அலுவலகங்கள் சுத்தப்படுத்துதல், அலுவலகத்தை மேம்படுத்துதல் , பழைய பொருட்களை அகற்றுதல், பொதுக் குறைகளுக்குத் தீர்வு காணுதல், ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
***
(Release ID: 2175316)
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2175526)
आगंतुक पटल : 25