கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனரக தொழில்கள் அமைச்சகம் தூய்மையே சேவை இயக்கம் 2025-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 05 OCT 2025 10:40AM by PIB Chennai

கனரக தொழில்கள் அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் வீட்டு வசதி & நகர்ப்புற மேம்பாடு அமைச்சகம் ஆகியவை கூட்டாக இணைந்து 2025 செப்டம்பர் 17-ம் தேதி  முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற்ற நாடு தழுவிய தூய்மையே சேவை இயக்கத்தில் வெற்றிகரமாக பங்கேற்றன.

தூய்மை இயக்கத்தின் மூலம் தூய்மையான மற்றும் நிலையான இந்தியாவை வளர்ப்பதற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், கனரக தொழில்கள் அமைச்சகம் அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுடன்  இணைந்து தூய்மையான, நிலையான மற்றும் முன்னேற்றம் நிறைந்த நாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதுபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 90க்கும் மேற்பட்ட  இடங்கள் தூய்மைக்கான இடங்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் 45 பொது இடங்கள் சுத்தம் செய்வதற்காக அடையாளம் காணப்பட்டனஇதில் 2,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தூய்மையே சேவை உணர்வை மேலும் வலுப்படுத்த, கனரக தொழில்கள் அமைச்சகம் மற்றும் அதன்  மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் படைப்பாற்றல் மிக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குப்பையில் இருந்து கலை கண்காட்சிகள், "தூய்மையை நோக்கி ஒரு அடி முன்னே" என்ற முழக்கத்தின் கீழ் ஓவியப் போட்டிகள், மரம் நடுதல் மற்றும் பிற விழிப்புணர்வு திட்டங்கள் ஆகியவை நடைபெற்றன.

இந்த முயற்சிகளில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உற்சாகமான பங்கேற்பு இருந்தது.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174938

***

AD/VK/RJ


(Release ID: 2174969) Visitor Counter : 7
Read this release in: English , Urdu , Hindi