சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்தியசுற்றுலா சென்னைப் பிரிவு மெரினா கடற்கரையில் இன்று தூய்மைசெய்யும் பணியை மேற்கொண்டது

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2025 2:05PM by PIB Chennai

 

2025 அக்டோபர் 2 அன்று, மகாத்மா காந்தி பிறந்தநாளில், நாடு தழுவிய தூய்மையே சேவை மற்றும் தூய்மை இந்தியா தினத்தை முன்னிட்டு, இந்தியசுற்றுலா சென்னைப் பிரிவு,  இந்திய உள்நாட்டு சுற்றுலா நடத்துவோர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுடன் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மை இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

மெரினா கடற்கரையின் இயற்கை அழகைப் பாதுகாக்கவும், பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவத்தை உறுதி செய்யவும், உழைப்பாளர் சிலையை ஒட்டிய புல்வெளி, எம்ஜிஆர் நினைவிடத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி ஆகியவை தீவிரத் தூய்மைப் பணிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் இந்திய உள்நாட்டு சுற்றுலா நடத்துவோர் சங்கத் தமிழ்நாடு பிரிவின் உறுப்பினர்கள், இந்தியசுற்றுலா சென்னைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களை  இந்தியசுற்றுலா சென்னைப் பிரிவு இயக்குநர் (தெற்கு) திரு டி. வெங்கடேசன் பாராட்டி கெளரவித்தார் .

 

 

***

SS/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2174191) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English